அசைவ உணவு சாப்பிட்டால் ‘ராயல் என்பீல்ட்’ பைக் பரிசு – மஹாராஷ்டிராவில் நடந்த நிகழ்வு!!

0

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது ஹோட்டலின் விற்பனை அதிகரிப்பதற்காக அந்த ஹோட்டலின் உரிமையாளர் ஓர் புதிய முயற்சியை எடுத்துள்ளார். தற்போது அந்த ஹோட்டல் உரிமையாளரின் இந்த புதிய முயற்சி அனைவரையும் ஈர்த்துள்ளது.

மகாராஷ்டிரா:

தற்போது கொரோனா காலத்தில் இருந்து மீண்டு வருவதால் அனைத்து தொழில்களும் சற்று மந்தமாக இருந்து வருகிறது. மேலும் தங்களது விற்பனை அதிகரிக்க பலரும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த வரிசடையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓர் ஹோட்டல் உரிமையாளர் தனது ஹோட்டலில் விற்பனை அதிகரிப்பதற்காக ஓர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். அது என்னவென்றால் 1 மணி நேரத்தில் அவர்கள் கொடுக்கும் 4 கிலோ அசைவ சாப்பாட்டை சாப்பிட்டால் அவர்களுக்கு சுமார் ரூ. 1.65 லட்சம் மதிப்புள்ள ராயல் என்பீல்ட் வண்டியை பரிசாக அளிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

புல்லெட் தாலி சேலஞ்ச்:

இதற்கு “புல்லெட் தாலி சேலஞ்ச்” என்று பெயரிட்டுள்ளார். இதன்மூலம் அவரது கடைக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. புல்லெட் தாலி என்பது அசைவ உணவுகள் அடங்கிய தட்டு. அவர்கள் கொடுக்கும் 4 கிலோ அசைவ சாப்பாட்டில் என்னென்ன இடம் பெற்றிருக்கும் என்றால், இதில் 4 கிலோ மட்டன் மற்றும் மீன்களுடன் தயாரிக்கப்பட்ட சுமார் 12 உணவுகளை கொண்டுள்ளது. ஃபிரைட் சுர்மாய், பாம்ஃப்ரெட் ஃப்ரைட் ஃபிஷ், சிக்கன் தந்தூரி, உலர் மட்டன், கிரே மட்டன், சிக்கன் மசாலா மற்றும் இறால் பிரியாணி ஆகியவை இதில் அடங்கும். ஒவ்வொரு தாலியின் விலை ரூ .2,500 ஆகும்.

நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் – ட்ரெண்ட் ஆக்கும் ரசிகர்கள்!!

இந்த ஹோட்டல் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே அருகே வாட்கான் மாவால் என்னும் பகுதியில் உள்ளது. இந்த ஹோட்டலின் உரிமையாளரின் பெயர் அதுல் வைகர் ஆவர். இந்த திட்டத்தின் மூலம் சிவராஜ் என்னும் இவரது ஹோட்டலின் பெயர் அனைவராலும் கவரப்பட்டது. தற்போது இந்த போட்டியில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சோலாப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சோம்நாத் பவார் என்பவர் இந்த போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றுள்ளார். மேலும் இவருக்கு பரிசாக புதிய ராயல் என்பீல்ட் வாகனம் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த ஹோட்டலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here