தீ மற்றும் ஆசிட் ஊற்றியதால் காட்டு யானை சாவு – நீலகிரியில் கொடூர சம்பவம்!!

0

நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை ஒன்று காதில் ரத்தம் வழிந்து உயிரிழந்துள்ளது. இறந்த யானையின் பிரேத பரிசோதனையில் தீ மற்றும் ஆசிட் போன்ற திரவங்களை ஊற்றி அந்த யானை கொடூரமாக தாக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

காட்டு யானை சாவு

நீலகிரி மசினகுடி பகுதியில் காட்டு யானை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மசினகுடி பகுதியில் 40 வயதுள்ள காட்டு யானை ஒன்று சில மாதங்களாக சுற்றி திரிந்து கொண்டிருந்தது. கடந்த மாதம் அந்த யானைக்கு முதுகில் ஒரு காயம் ஏற்பட்டு இரண்டு விலா எலும்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் அந்த யானைக்கு சிகிச்சை செய்யப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மீண்டுமாக இரண்டு நாட்களுக்கு முன்பாக அடையாளம் தெரியாத சில நபர்கள் அந்த யானையை காது பகுதியில் தாக்கியுள்ளனர். இதில் அந்த யானையின் இடது காது கிழிந்து இரண்டு நாளாக ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. இந்த காயத்தினால் யானையின் உடலிலிருந்து சுமார் 40 லிட்டர் ரத்தம் வரை வெளியேறியிருக்கிறது.

வனத்துறையினர் மீட்பு

உயிருக்கு ஆபத்தான நிலையில் யானையை வனத்துறையினர் மீட்டு முதுமலை வளர்ப்பு யானை முகாமுக்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியிலேயே யானை பரிதாபமாக உயிரிழந்தது. யானையின் பிரேதபரிசோதனை இன்று காலை 9 மணி முதல் நடத்தப்பட்டது. பிரேதபரிசோதனையில் யானையின் காதில் பெட்ரோல் ஊற்றி எரியவைத்தற்கான அடையாளம் காணப்பட்டது. மேலும் ஆசிட் திரவாகத்தையும் ஊற்றி காயப்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மீண்டும் குண்டாக மாறிய கீர்த்தி சுரேஷ் – ‘தமிழில் இன்னும் ஒரு ரவுண்டு வருவார்’ என கணிப்பில் ரசிகர்கள்!!

யானையை இத்தனை கொடூரமாக கொன்றவர்களை குறித்து வனத்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிய வந்திருக்கிறது. இதற்கான விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு விசாரணை முடிவில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here