என்னது.. 3 படத்துல நடிச்சுருக்க வேண்டியது  இவங்களா?? சூப்பர் சான்ஸை கோட்டை விட்ட பிரபல நடிகை!!

0

தமிழில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான படம் 3. காதல் சொட்ட சொட்ட எடுக்கப்பட்ட இப்படத்தில் நாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் தன் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் இப்படம் பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

காதல் திருமணம் செய்துகொள்ளும் கணவன் மனைவி இடையில் வரும் மன போராட்டங்களையும் இறுதியில் அதீத காதலால் அந்த கணவனுக்கு வந்த மன நோயால் அவன் படும் இன்னல்களையும் ஆழமாக ரசிகர்களிடம் சேர்த்த படம் 3. தன் முதல் படத்திலேயே ரசிகர்களின் ஆதரவை இப்படம் மூலம் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் பெற்றார்.

 

இந்த படத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணம் அதில் நடித்துள்ள நடிகர்கள். ஆனால் இதில் கதாநாயகி வேடத்தில் சுருதி ஹாசனுக்கு முன்னதாக முதலில் பேசப்பட்டது அமலா பால் தானாம். ஆனால் அமலா பால் பிற படங்களில் நடித்து பிஸியாக இருந்ததால் 3 படத்தை அவரால் நடிக்க முடியவில்லை.  எனவே அந்த பட வாய்ப்பு சுருதி ஹாசனுக்கு வழங்கபட்டது.

ஒரு வேளை இப்படத்தில் அமலா பால் நடித்து இருந்ததால் கண்டிப்பாக அவரின் நடிப்பு பேசப்பட்டிருக்கும் என்று அமலா பால் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here