திடீரென அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு – அதிர்ச்சி தகவல் வெளியீடு!!

0
திடீரென அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு - அதிர்ச்சி தகவல் வெளியீடு!!
திடீரென அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு - அதிர்ச்சி தகவல் வெளியீடு!!

தற்போதைய உலகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் என பல குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாராஷ்டிராவின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக விளங்கும் அகோலாவில் இருக்கும் பழைய நகர காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை சிறு தகராறில் இரு குழுக்களுக்கிடையில் வன்முறை மோதல் வெடித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த மோதலில் இரு குழுக்களை சேர்ந்தவர்கள் வாகனங்களை சேதப்படுத்தியும், ஒருவொருக்கொருவர் கற்களை வீசி எறிந்தும் சண்டை போட்டு சாலையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மோதலுக்கு பிறகு பழைய நகர காவல் நிலையத்திற்கு ஏராளமானோர் பேரணியாக சென்றதாக கூறப்படுகிறது.

TNTET தேர்வர்களே.., இன்னும் ஒரு வாரத்தில் நியமன தேர்வு ரத்து?? வெளியான முக்கிய தகவல்!!

எனவே மீண்டும் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்க கூடாது என்பதற்காகவும், இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியர் அகோலா நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன்பு சங்கர் நகர் பகுதியான அகோட் பைல் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here