
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை பணியமர்த்த TNTET தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2013 ஆம் ஆண்டில் இருந்தே TNTET தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 வருடங்கள் ஆகியும் பணி நியமனம் செய்யப்படவில்லை. மேலும் TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நியமன தேர்வு எழுத வேண்டும் என்ற ரூல் போடபட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற வண்ணம் தான் இருந்தது. மேலும், திமுக தேர்தல் வாக்குறுதியாக நியமன தேர்வை ரத்து செய்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்வதாக கூறப்பட்டிருந்தது. இப்படி இருக்க 2 வருஷங்கள் ஆகியும் அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாததால் இப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேகமெடுக்கும் கொரோனா வைரஸ்.., பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு – உலக சுகாதார மையம் அறிவிப்பு!!
அரசியல்வாதிகள் பலரும் இவர்களுக்கு ஆதரவும் அளித்து வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் செய்யும் ஆசிரியர்களுடன் பொன்முடி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதாவது அரசாணை எண் 149 ன் படி ரத்து செய்வது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒரு வாரத்தில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.