Thursday, May 2, 2024

13 வயதில் இப்படி ஒரு குணமா?

Must Read

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், 13 வயது சிறுமி மற்றும் தொழிலபதிபரின் உதவியால நாடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தாக்கம்

கொரோனா தாக்கத்தினால் உலகளிவில் உள்ள அனைத்து மக்களும் தவிப்பிற்கு உள்ளாகி வேலை, உணவு, இருப்பிடம் என அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர் .

பல தன்னார்வாளர்கள் தங்களால் இயன்ற உதவியை தமது பகுதி மக்களுக்கு செய்து வருகின்றனர்.

எனினும் உலகளாவிய எல்லைகளை கடந்து மக்களை தாயகம் திரும்ப உதவுவது என்பதை மிகவும் பெரிய செயல் தான்.

துண்டிக்கப்பட்ட போக்குவரத்து

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகில் பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. நடிகர் நிதின், ஷாலினி திருமண விழா புகைப்படங்கள் – இணையத்தில் வைரல்!! இதன் காரணமாக சொந்த நாட்டை விட்டு வேறொரு நாட்டிற்கு சென்ற ஏராளமான மக்கள் தங்கள் நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அரசு அம்மக்களை மீட்க பல முயற்சிகளை எடுத்து சில சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றது.

அனன்யா ஸ்ரீவஸ்தவா

சாமானிய மக்களால் விமான டிக்கெட்டை கூட வாங்க இயலாமல் தவித்து வருவதை கண்ட அனன்யா ஸ்ரீவஸ்தவா என்ற 13 வயது மாணவி தொழிலதிபரின் உதவியால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 68 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேமிப்பு பணம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்த 13 வயது சிறுமி ஷார்ஜாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தானும் உதவி செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

அதன் படி தான் சேமித்து வைத்திருந்த ரூபாய் 61 ஆயிரம் பணத்தை வைத்து இரண்டு இந்தியருக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து உதவியுள்ளார்.

அமிருதீன் அஜ்மல்

இதே போல் சேர்ந்த தொழிலதிபரான அமிருதீன் அஜ்மல், இந்திய மக்கள் பலரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ளதை அறிந்து அவர்களுக்கு உதவுவதற்காக 20 லட்சம் ரூபாய் செலவு செய்து 66 பேருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார்.

சிக்கிய மக்கள் மீண்டும் தனது குடும்பத்தினருடன் சேர்த்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என தான் நினைப்பதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -