ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் – பிசிசிஐ ட்விஸ்ட், ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

0

அடுத்த ஆண்டு 2021இல் நடக்கவிருக்கும் ஐபில் போட்டிகளில் 10 அணிகள் பங்கேற்கும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்திருந்தார். தற்போது அதில் பிசிசிஐ நிர்வாகம் புதிய ட்விஸ்ட் ஒன்றை நடத்தி உள்ளது.

ஐபிஎல் தொடர்:

இந்தியாவில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் ரசிர்கள் அனைவராலும் கவரப்பட்ட ஒன்று. இதில் பல்வேறு நாட்டு வீரர்களும் விளையாடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு போட்டிகள் நடைபெறுமா என்று அனைவரிடமும் கேள்வி எழுந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த கொரோனா காலங்களிலும் பிசிசிஐ நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் போட்டிகளை நடத்தியது பெருமைக்குரியதே. அதன்பின் பிசிசிஐயின் தலைவர் கங்குலி பேட்டி ஒன்றில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் பங்கேற்கும் என்று அறிவித்திருந்தார். இது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வரும் 24 ஆம் தேதி பிசிசிஐ இந்த ஆண்டுக்கான பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ளது. இதில் பல்வேறு அம்சங்கள் குறித்து உரையாடவுள்ளனர். மேலும் ஐபிஎல் போட்டிக்கான 10 அணிகள் சேர்ப்பதற்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. ஆனால் அதனை 2022இல் தான் நடத்த முடியும் என்றும் கூறியுள்ளது.

பிரபல தமிழ் விளையாட்டு வர்ணனையாளர் ஜப்பார் மரணம்!!

இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஏனெனில் 10 அணிகள் பங்கேற்றால் போட்டி சுமார் இரண்டரை மாதங்களாக நடைபெறும், மொத்தம் 94 போட்டிகள் இடம் பெறும். அதுமட்டுமல்லாமல் அவ்வளவு காலங்கள் வெளிநாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் இருக்க முடியாது என்றும் கூறியுள்ளது. இதை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here