அடேங்கப்பா அதுக்குள்ள 1 வருஷம் ஆயிடுச்சா?? திரும்பி பார்க்க வைக்கும் லாக்டவுன் நினைவுகள்!!

0

கடந்த ஆண்டு இதே தினத்தில் தான் தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் அனைத்தும் கொரோனா பரவல் எதிரொலியாக மூடப்பட்டது. தற்போது அதற்குள் ஒரு வருட காலம் கழிந்து விட்டது.

கொரோனா:

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா என்னும் வைரஸ் சீனாவில் இருந்து பரவி மக்களை துன்புறுத்தி வந்தது. இதனை தடுக்கும் வகையில் முதல் கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. மேலும் மாணவர்கள் அனைவருக்கும் விடுமுறையும் அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வந்த ஒரு சில வாரங்களில் தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பலரது வாழ்க்கையின் வாழ்வாதாரமே கேள்விக்குறியானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இதனை முழுவதுமாக கொண்டாடியவர்கள் என்றால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தான். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட துவக்கத்தில் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எதுவும் நடக்கவில்லை. அதனால் வீட்டில் இருந்தபடியே நல்ல சாப்பிட்டு தங்களது போனில் கேம் விளையாடி பொழுதை மகிழ்ச்சியாக கழித்து வந்தனர். பின்பு சில தினங்களுக்கு பின்பு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது.

கமலுக்கே நோ சொன்ன மாவட்ட ஆட்சியர் – அப்போ பிரச்சார வேலை என்னாகுறது??

இருந்தும் கூட சில மாணவர்கள் அதில் பங்குபெறாமல் தங்களது ஊரடங்கை கொண்டாடி வந்தனர். இவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த ஆண்டு இதே மார்ச் 16ம் தேதி மூடப்பட்டது. தற்போது இந்த நிகழ்வு நடந்து சுமார் 1 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது இதனை மீம் கிரியேட்டர்ஸ்கள் மீம்களை தயாரித்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here