கமலுக்கே நோ சொன்ன மாவட்ட ஆட்சியர் – அப்போ பிரச்சார வேலை என்னாகுறது??

0

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேட்ட அனுமதிக்கு மாவட்ட ஆட்சியர்கள் மறுத்துள்ளனர். தற்போது இதனால் பரபரப்பாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் புதிதாக களமிறங்குகிறார் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன். இந்த தேர்தலில் கமல்ஹாசன் சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிகளுடன் தமிழக தேர்தல் களத்தில் களமிறங்குகிறார். மேலும் இவர் நடைபெறவுள்ள தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடவுள்ளார். இந்த தேர்தலில் இவர் தான் முதல்வர் வேட்பாளர் என கூட்டணி கட்சிகள் ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவரது வருகையால் தேர்தல் முடிவுகளில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்த கமல்ஹாசன் தற்போது தேர்தல் பிரச்சார பணிகள் குறித்த வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கமல்ஹாசன் ஹெலிகாப்டர் மூலம் தான் பிரச்சாரம் செய்யும் பகுதிகளுக்கு சென்று வருகிறார். இந்நிலையில் இதில் ஓர் சிக்கல் எழுந்துள்ளது.

ஜெயலலிதா இறந்ததுக்கு காரணமே திமுக தான் – ஜெயக்குமார் பகிரங்க பேட்டி!!

அது என்னவென்றால் தனது பிரச்சார வேலைகளுக்காக ஓர் குறிப்பிட்ட இரண்டு மாவட்டங்களுக்கு ஹெலிகாப்டரில் வருவதற்கு கமல் திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த மாவட்டங்களில் ஹெலிகாப்டரை நிறுத்துவதற்கு அந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் அனுமதி கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இதன் காரணமாக அந்த பகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு கமல் செல்வதற்கு தவிர்த்து வருகிறார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here