ஜியோவின் அசத்தல் ஆபர் – ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா இலவசம்..!

0
jio amazon prime
jio amazon prime

மேசான் பிரைமின் ஒரு வருடத்திற்கான சந்தாவினை ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குவதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அறிவித்திருக்கிறது.ரூ.999 மதிப்புள்ள அமேசான் பிரைம் சந்தாவில் அமேசான் பிரைம் வீடியோக்களை வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்திற்கு பார்த்து ரசிக்க முடியும்.

தமிழகத்தில் இன்று 1,989 பேருக்கு கொரோனா உறுதி – ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு..!

ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா ப்ரீ

jio amazon prime
jio amazon prime

இந்த அமேசான் சலுகையை மைஜியோ ஆப்பிள் காணப்படும்.இந்த சலுகையை பெற ஜியோ ஃபைபர் கோல்டு அல்லது அதற்கும் அதிக விலையுள்ள பலன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இந்த சலுகை ஜியோ ஃபைபர் புதிய  மற்றும் பழைய வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.ஜியோ ஃபைபர் சலுகையை தேர்வு செய்த பின் மைஜியோ செயலி அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம் சென்று ஜியோ ஃபைபர் அக்கவுண்ட்டில் லாகின் செய்ய வேண்டும். பின் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தாவுக்கான விளம்பர பேனரை க்ளிக் செய்து அமேசான் பிரைம் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்ய வேண்டும்.அமேசான் பிரைம் சந்தாவில் வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோ, இலவச வேகமான டெலிவரி, சலுகைகளை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதி, பிரைம் விளம்பரம் இல்லா மியூசிக், பிரைம் கேமிங் மற்றும் பிரைம் ரீடிங் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியும். முன்னதாக ஜியோ செட் டாப் பாக்சில் பிரைம் வீடியோ செயலி இணைக்கப்பட்டது. ஏற்கனவே ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, சன் நெக்ஸ்ட், வூட் மற்றும் ஜியோசினிமா சந்தா உள்ளிட்டவற்றை தேர்வு செய்யப்பட்ட சில ஜியோ ஃபைபர் சலுகைகளில் வழங்கப்படுகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஆக்டிவேட் செய்வது எப்படி?

jio fiber
jio fiber

ஏற்கனவே ஜியோ ஃபைபர் சேவையின் கீழ் உள்ள சந்தாதாரர்கள் தங்கள் அமேசான் ப்ரைம் அக்கவுண்ட்டிற்குள் லாக்-இன் செய்து இந்த வருடாந்திர அமேசான் ப்ரைம் சந்தாவை செயல்படுத்தலாம் அல்லது அவர்களின் ஜியோ செட்-டாப் பாக்ஸ் மூலம் புதிய அமேசான் அக்கவுண்ட்டை உருவாக்கலாம். மைஜியோ ஆப் அல்லது ஜியோ.காம் ஆகியவற்றைப் பயன்படுத்தி லாக்-இன் செய்வதின் மூலமும் அவர்கள் இந்த இலவச சேவையை ஆக்டிவேட் செய்யலாம்.

யாருக்கெல்லாம் கிடைக்காது?

Jio
Jio

ஜியோ ஃபைபர் கோல்ட், டயமண்ட், பிளாட்டினம் மற்றும் டைட்டானியம் திட்டங்கள் மட்டுமே இந்த இலவச வருடந்திரா சந்தா பயனைப் பெறுகின்றன. ஜியோ ஃபைபர் சில்வர் மற்றும் ஜியோ ஃபைபர் ப்ரான்ஸ் திட்டங்களை பயன்படுத்தும் சந்தாதாரர்கள் இந்த சலுகைக்கு தகுதியற்றவர்கள், ஒருவேளை இந்த இலவச சந்தாவை பெற விரும்பினால் அவர்கள் ஜியோ ஃபைபர் கோல்ட் பிளானை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here