மும்பை அணியில் அதிரடி மாற்றங்கள்.., அடுத்த சீசனிற்கு புதிய பயிற்சியாளர் யார்..??

0
மும்பை அணியில் அதிரடி மாற்றங்கள்.., அடுத்த சீசனிற்கு புதிய பயிற்சியாளர் யார்..??
மும்பை அணியில் அதிரடி மாற்றங்கள்.., அடுத்த சீசனிற்கு புதிய பயிற்சியாளர் யார்..??

முன்னாள் வீரர்களான ஜாகீர் கான் மற்றும் மஹேலா ஜெயவர்த்தனே ஆகியோரின் சிறப்பான செயல்பட்டால் மும்பை இந்தியன்ஸ் அணி அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி!!

இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேல ஜெயவர்த்தனே பல சர்வதேச தொடர்களில் விளையாடி அதிக ரன்கள் குவித்துள்ளார். இந்த சர்வதேச தொடர்களில் இருந்து ஓய்வு பெற்ற ஜெயவர்த்தனே உள்ளூர் தொடர்களில் சில அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்து வந்தார். அதன் பிறகு IPL தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக செயல்படும் வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வாய்ப்பை தற்போது வரை சிறப்பாக பயன்படுத்தி வந்த ஜெயவர்த்தனே தற்போது பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஏனெனில் அவருக்கு தற்போது MI கிரிக்கெட் டெவெலப்மென்டின் மேலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதே போல் கிரிக்கெட் ஆபரேஷன்ஸ் இயக்குநராக இருந்த முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானுக்கும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இவர் MI கிரிக்கெட் டெவெலப்மென்டின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை மும்பை இந்தியன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இவர்கள் இருவருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் பதிவு உயர்வு வழங்கியுள்ளது. இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதால் MI அணிக்கான பயிற்சியாளர் இடம் தற்போது காலியாக உள்ளது. இதனால் விரைவில் சிறந்த பயிற்சியாளரை தேர்ந்தெடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here