இனியாவை மொத்தமாக கோபியிடம் இருந்து ஒதுக்கும் ராதிகாவின் அம்மா – அடுத்து நடக்க இருக்கும் விபரீதம் என்ன??

0
இனியாவை மொத்தமாக கோபியிடம் இருந்து ஒதுக்கும் ராதிகாவின் அம்மா - அடுத்து நடக்க இருக்கும் விபரீதம் என்ன??
இனியாவை மொத்தமாக கோபியிடம் இருந்து ஒதுக்கும் ராதிகாவின் அம்மா - அடுத்து நடக்க இருக்கும் விபரீதம் என்ன??

விஜய் டிவியில் பல்வேறு கதைக்களத்தில் சீரியல்கள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருப்பது பாக்கியலட்சுமி சீரியல். இந்நிலையில் மாமியாருடன் சேர்ந்து துணிச்சலான முடிவை ஜெனி தற்போது எடுத்துள்ளார்.

அடுத்து வர உள்ள ட்விஸ்ட்:

பாக்கியலட்சுமி சீரியலில், கோபி வீட்டை விட்டு சென்று விட்டதால் குடும்பத்தை பார்த்து கொள்ளும் முழு பொறுப்பும் பாக்கியாவின் கையில் வந்து உள்ளது. அதனால் பாக்கியா சமையல் தொழிலில், ஏதாவது செய்து முன்னேற வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் பாக்யாவுக்கு திருமண கேட்டரிங் ஆர்டர் கிடைத்து உள்ளது. இந்நிலையில் ஜெனி, ஆன்ட்டி தனியா இந்த குடும்பத்துக்காக கஷ்டப்படுறதை என்னால பார்க்க முடியல. அதனால், நான் வேலைக்கு போகலாம் இருக்கேன் என பாக்யாவிடம் கூறுகிறார்.

இதை கேட்டு பாக்கியா, நீ வேலைக்கு போறது எனக்கு சந்தோஷம் தான். நம்ம கேட்டரிங்க்கு வர்ற ஆர்டர் எல்லாம் நீ எடு. மேலும் செல்வி, அப்போ ஜெனிதான் இனிமே நம்ம மேனேஜர் என கூறுகிறார்.இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் கோபி-ராதிகா கல்யாணத்துக்கு டிரஸ் எடுப்பதை பற்றி பேசும்போது, மயூ எனக்கு பாவாடை, சட்டை வேணும் என சொல்கிறார். அதற்கு கோபி, அப்படியே இனியாவுக்கும் என பேச்சை ஆரம்பித்து நிறுத்திவிடுகிறார்.

அதற்கு ராதிகா, எனக்கு இனியாவும், மயூவும் ஒன்னு தான். அவளுக்கும் சேர்த்தே நம்ம டிரஸ் எடுக்கலாம் என கூறுகிறார். இந்தப் பக்கம் ராதிகாவிடம்அவர் அம்மா, உனக்கு நல்ல வாழ்க்கை அமைய போகுது. இப்போ எதுக்கு இனியாவுக்கும் டிரஸ் எடுக்கலாம்ன்னு சொல்ற. கோபி அந்த குடும்பத்துக்கு போகாத வரை தான் உனக்கு நல்லது. அவரை உன் கைக்குள்ள வச்சுக்க என கூறுகிறார். இதையடுத்து ராதிகா என்ன செய்ய போகிறார் என்பதை வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here