அமீருக்கு திடிர்னு அடித்த லாட்டரி.., பாவனியை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே அதிர்ஷ்டம் கொட்டுதே!!

0
அமீருக்கு திடிர்னு அடித்த லாட்டரி.., பாவனியை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே அதிர்ஷ்டம் கொட்டுதே!!
அமீருக்கு திடிர்னு அடித்த லாட்டரி.., பாவனியை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே அதிர்ஷ்டம் கொட்டுதே!!

சின்னத்திரையில் பிரபல ஜோடியாக இருக்கும் அமீர்-பாவனியின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமீர்-பாவனி:

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றவர் தான் நடிகை பாவனி. சின்னத்தம்பி சீரியல் தான் ரசிகர்கள் இடத்தில் அவரை பிரபலமாக்கியது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் தனது கணவர் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவத்தை குறித்து பேசி கண் கலங்கினார். அதை கேட்ட பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் ஷோவின் இடையில் கலந்து கொண்டவர் தான் நடன கலைஞர் அமீர். அவர் மக்கள் பலருக்கும் அறிமுகம் இல்லாத நபராக இருந்தவர்.

இப்போது இவர்கள் இருவரையும் தெரியாத மக்களே இருக்க முடியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னிடம் உள்ள நடன திறமையை வைத்து பார்வையாளர்களை தன் வசம் இழுத்து கொண்டார். குறிப்பாக மன கஷ்டத்தில் இருந்து வந்த பாவனியின் கவலையை போக்கி ஒரு தலையாக காதல் செய்து வந்தார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பாக ஆடி டைட்டிலையும் அடித்து சென்றனர். இந்நிலையில் அமீர் காதலை ஏற்றுக் கொண்ட பாவனி, கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் சேர்ந்து வாங்கிய புதிய காருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here