நாகர்கோவில் அரைத்து ஊற்றிய பூசணிக்காய் மாங்காய் பச்சடி ரெசிபி… மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க!!!

0

காய்கறிகள் எண்ணிலடங்காத பல்வேறு சத்துக்களை தன்னகத்தே கொண்டது. மேலும் இவை உடலுக்கு நீர் சத்து, புரதச் சத்து, வைட்டமின் போன்ற முக்கிய அனைத்து சத்துக்களையும் தன்னில் அடக்கி உள்ளது. இந்நிலையில் நம்மில் பலர் இந்த காய்கறிகளை அந்த அளவிற்கு விரும்புவதில்லை. அதிலும் பூசணிக்காய், சவ் சவ் உள்ளிட்ட பல காய்கறிகள் நாம் ஒதுக்க கூடிய ஒரு காய்கறிகளாக உள்ளது. இந்நிலையில் அந்த பூசணிக்காய் மாங்காய் வைத்து இப்படி ஒரு பச்சடி செய்தால் மிச்சம் இல்லாமல் ஒரு நொடியில் காலியாகும்.

தேவையான பொருட்கள்

மஞ்சள் பூசணிக்காய் – 1/2

மாங்காய் – 1/2

பச்சை மிளகாய் – 2

தேங்காய் துருவல் – 1கப்

சீரகம் – 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

பூண்டு – 1

சின்ன வெங்காயம் – 1

கடுகு – 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் – 5

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

தயிர் – சிறிதளவு

செய்முறை

முதலில் தேங்காய் துருவல்,சீரகம்,மஞ்சள் தூள்,பூண்டு, சின்ன வெங்காயம்,மிளகாய் வற்றல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் போன்றவற்றை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். அதில் நறுக்கி சுத்தம் செய்து வைத்து உள்ள பூசணிக்காய் மற்றும் மாங்காய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

அதன் பின் அதில் உப்பு மற்றும் தண்ணீர்  சேர்த்து வேக வைக்கவும். அது வெந்து வந்ததும் லைட்டாக ஒன்றிரண்டாக மசித்து கொள்ளவும். அதன் பின்னர் அரைத்து வைத்த தேங்காய் கலவையை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும். அதன் பிறகு இறக்கும் தருவாயில் சிறிதளவு தயிர் சேர்த்து இறக்கி விடவும். தற்போது சுவையான அரைத்து ஊற்றிய பூசணிக்காய் மாங்காய் பச்சடி தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here