ஜியோமி ட்ரூ வயர்லெஸ் இயர்போன் 2.0 – இந்தியாவில் அறிமுகம்..!

0

ஜியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி பல வகைப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களையும் தயாரித்து வருகிறது. அந்த வகையில் Mi ட்ரூ வயர்லெஸ் இயர்போன் 2.0 இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. அதன் சிறப்பம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ட்ரூ வயர்லெஸ் இயர்போன் 2.0:

இந்த இயர்போன் மே 12ம் தேதி மதியம் 12 மணிக்கு அமேசான் மற்றும் Mi.com இல் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலை ரூ. 4,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் வரும் மே 12-17ம் தேதிகளில் ரூ.3,999 க்கு சீன நிறுவனம் விற்க உள்ளது. இதன் வடிவமைப்பு ஆப்பிள் நிறுவனத்தின் இயர்பாட்களை போன்று உள்ளது. 14.2 டைனமிக் டிரைவர் கொண்டுள்ள இந்த இயர்போன் ப்ளூடூத் 5.0 உடன் SPC, AAC மற்றும் LHTC போன்ற கோடெக்களை ஆதரிக்கும் வசதியை பெற்று உள்ளது.

ட்ரூ வயர்லெஸ் இயர்போன் 2.0 ல் 30 mAh பேட்டரியும், இதன் சார்ஜிங் கேஸில் 250 mAh பேட்டரி வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. இதில் கூகிள் அசிஸ்டன்ட், அலெக்சா மற்றும் சிரி ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டு உள்ளது. டச் சென்சிடிவ் கண்ட்ரோல் மூலம் பிளேபேக்கை இந்த இயர்போனில் கட்டுப்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here