உலக டேபிள் டென்னிஸ் (WTT): சீன வீரர்களை வீழ்த்திய இந்திய வீரர்கள்…, அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!!

0
உலக டேபிள் டென்னிஸ் (WTT): சீன வீரர்களை வீழ்த்திய இந்திய வீரர்கள்..., அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!!
உலக டேபிள் டென்னிஸ் (WTT): சீன வீரர்களை வீழ்த்திய இந்திய வீரர்கள்..., அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!!

உலக டேபிள் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் மானவ் தக்கர் மற்றும் சனில் ஷெட்டி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

உலக டேபிள் டென்னிஸ் (WTT):

ஜோர்டானின் தலைநகரமான அம்மானில் உலக டேபிள் டென்னிஸ் (WTT) தொடர் நடைபெற்று வருகிறது. இன்று முதல் வரும் 12ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் பலர் பங்கு பெற்றுள்ளனர். குறிப்பாக, சத்தியன் ஞானசேகரன், சரத் கமல், மானவ் தக்கர், ஹர்மீத் தேசாய், மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுல உள்ளிட்டோர் வெவ்வேறு பிரிவுகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், மானவ் தக்கர் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், சீனாவின் சிஏஓ வெய் வீரரை எதிர்த்துப் போட்டியிட்டார். இந்த போட்டியின் முதல் செட்டை 11-4 என்ற புள்ளி கணக்கில் அபாரமாக கைப்பற்றிய மானவ் தக்கர், 2வது செட்டை 9-11 என்ற புள்ளி கணக்கில் தவறவிட்டார். இதையடுத்து, தலா ஒரு செட்டை இருவரும் கைப்பற்றிய நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்கும் 3 வது செட்டுக்கு போட்டி நகர்ந்தது.

இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்வதே மிகப்பெரிய வெற்றி”…, ஆஸ்திரேலிய நட்சத்திரம் ஓபன் டாக்!!

இதில், இந்தியாவின் மானவ் தக்கர் 11-8 மற்றும் 11-9 என தொடர்ந்து இரு செட்டை வென்றதுடன், 3-1 (11-4,9-11,11-8,11-9) என்ற கணக்கில் சீன வீரரை வீழ்த்தினார். இதனால், இந்தியாவின் மானவ் தக்கர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இதே போல, இந்தியாவின் சனில் ஷெட்டி 3-2 என்ற செட் கணக்கில் சீன வீரரை வீழ்த்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here