விஜய்க்கு பின், flop ஹீரோவுக்கு ஸ்கெட்ச் போட்ட தில் ராஜு? நம்ம தலைக்கு தில்ல பாத்தியா?

0
விஜய்க்கு பின், flop ஹீரோவுக்கு ஸ்கெட்ச் போட்ட தில் ராஜு? நம்ம தலைக்கு தில்ல பாத்தியா?
விஜய்க்கு பின், flop ஹீரோவுக்கு ஸ்கெட்ச் போட்ட தில் ராஜு? நம்ம தலைக்கு தில்ல பாத்தியா?

விஜய் தேவரகொண்டா நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த, முக்கியமான அப்டேட் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தேவரகொண்டா:

தெலுங்கு சினிமா வட்டாரங்களில் முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்த அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகவும் பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து பிரபல இயக்குநரான பூரி ஜெகந்நாத் படைப்பில், இவர் நடித்த லைகர் திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி வெளியானது. அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்து, பெரும் பொருட் செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை தந்து, போட்ட பணத்தைக் கூட எடுக்க முடியாமல் படுதோல்வி அடைந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது இயக்குனர் ஷிவா இயக்கத்தில் ‘குஷி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடன் சேர்ந்து நடிகை சமந்தா ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் 60% முடிந்த நிலையில், நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர்.

காதல் மன்னனாக கலக்கும் பிக் பாஸ் கவின்., டாடா படத்தின் அனல் பறக்கும் ட்ரெய்லர் வெளியீடு! ரசிகர்கள் வாழ்த்து!!

தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்து சோசியல் மீடியாவில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ‘கீதா கோவிந்தம்’ என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் பரசுராமுடன் மீண்டும் விஜய் தேவரகொண்டா இணைய இருப்பதாக கூறப்படுகிறது . மேலும் இப்படத்தை எஸ்.வி.சி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பரசுராம், தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here