
ஐசிசி சார்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இன்று இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் மோத உள்ளது. இந்திய அணியானது உலக கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆன நிலையில், அதற்கான ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால், இன்றிலிருந்து தொடங்கும் இந்த டெஸ்ட் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆரம்ப முதலே தனது அதிரடியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தரமான பிளேயிங் லெவனை இரு அணிகளும் களமிறக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில், இந்திய அணியை பொறுத்த வரையில், பேட்டிங், பவுலிங் என தரமாக இருந்தாலும், விக்கெட் கீப்பிங்கில் தான் இஷான் கிஷான் அல்லது கே எஸ் பரத் இருவருக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த போட்டியானது இந்திய நேரடி மதியம் 3 மணிக்கு ஆரம்பமாகும். இரு அணிகளின் பிளேயிங் லெவன் குறித்து பின்வருமாறு காணலாம்.
இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (சி), சுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், இஷான் கிஷான், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ்.
தமிழக அரசு பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய வசதி?? அப்போ இனி டிக்கெட் எடுக்குறது ரொம்ப ஈசி தான்!!
ஆஸ்திரேலிய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (சி), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட்.