தமிழக அரசு பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய வசதி?? அப்போ இனி டிக்கெட் எடுக்குறது ரொம்ப ஈசி தான்!!

0
தமிழக அரசு பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய வசதி?? அப்போ இனி டிக்கெட் எடுக்குறது ரொம்ப ஈசி தான்!!
தமிழக அரசு பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய வசதி?? அப்போ இனி டிக்கெட் எடுக்குறது ரொம்ப ஈசி தான்!!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில், ஆன்லைன் பண பரிவர்த்தனையானது சாதாரண மற்றும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. அதாவது, தெருக்களில் உள்ள சின்ன சிறு பொட்டி கடை முதல் மிக பெரிய மால்கள் வரை அனைத்து இடத்திலும் பண பரிவர்த்தனை எளிமையாக்கும் UPI வசதி உள்ளது. மேலும், போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஆட்டோக்களில் கூட இந்த வசதி விரிவு செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வசதி மூலம், வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணம் செலுத்த விரும்புவோருக்கு எளிதாக அனுப்ப முடிவதால் மக்கள் கையில் அதிக அளவில் பணம் வைத்திருப்பது இல்லை. ஆனால், பேருந்துகளில் இத்தகைய வசதி இல்லாததால் இதில் பயணம் செய்வோர் கண்டிப்பாக சில்லறை வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கேரளாவில் உள்ள அரசு பேருந்துகளில் டிக்கெட் விற்பனைக்கு இந்த வசதி ஏற்பாட செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்துகளில் UPI என்படும் “கியூ.ஆர் கோடு” வசதியை டிக்கெட் விற்பனைக்காக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதியானது சிறப்பாக செயல்பட்டு வரவே, தமிழக அரசு பேருந்துகளிலும் விரைவில் விரிவுபடுத்துவதற்கான கோரிக்கைகள் எழுந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here