முதலிடத்தை பறிகொடுத்த மும்பை இந்தியன்ஸ்…, 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி!!

0
முதலிடத்தை பறிகொடுத்த மும்பை இந்தியன்ஸ்..., 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி!!
முதலிடத்தை பறிகொடுத்த மும்பை இந்தியன்ஸ்..., 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி!!

மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில், டெல்லி அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி முதலிடத்தை எட்டி உள்ளது.

WPL:

இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில், நேற்று ஹர்மன்பிரீத் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது, டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்த்து மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து, களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் வீராங்கனைகள் டெல்லி அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறினர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதில், அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் கவுர் 23, பூஜா வஸ்த்ரகர் 26, இஸ்ஸி வோங் 23 ரன்கள் எடுத்திருந்தனர். இதையடுத்து, மிக எளிய இலக்கை துரத்திய டெல்லி அணி, ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 9 வது ஓவரிலேயே 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பாக ஷஃபாலி வர்மா 33, ஆலிஸ் கேப்ஸி 38* மெக் லானிங் 32* ரன்கள் எடுத்து அசத்தி இருந்தனர்.

அஜித்துக்கு சினிமா Chance வாங்கிக் கொடுத்ததே நான் தான்.., நன்றியை மறந்துட்டாரு.., கண்கலங்கிய போண்டா மணி!!

இந்த போட்டியின் மூலம், டெல்லி அணி புள்ளிப்பட்டியலில், மும்பை அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை UP வாரியர்ஸ் அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 8 புள்ளிகளுடன் 3வது இடத்தை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here