7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த வேர்ல்ட் ஜெயண்ட்ஸ்…, சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய ஆசியா லென்ஸ்!!

0
7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த வேர்ல்ட் ஜெயண்ட்ஸ்..., சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய ஆசியா லென்ஸ்!!
7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த வேர்ல்ட் ஜெயண்ட்ஸ்..., சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய ஆசியா லென்ஸ்!!

லெஜண்ட்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியில் ஆசியா லென்ஸ் அணியானது, 7 விக்கெட் வித்தியாசத்தில் வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி உள்ளது.

லெஜண்ட்ஸ் லீக்:

லெஜண்ட்ஸ் லீக் தொடரின் 3 வது சீசன் கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்றது. இந்த தொடரில், சர்வதேச அணிகளில் இருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் 3 அணிகளாக பிரிந்து விளையாடி வந்தனர். இதில், ஆசியா லென்ஸ் மற்றும் வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணிகள் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தனர். நேற்று நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணியில், கேப்டன் ஷேன் வாட்சன் (0) மற்றும் ஷேன் வாட்சன் (0) என அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனை தொடர்ந்து, லெண்டல் சிம்மன்ஸ் (17), ராஸ் டெய்லர் (32), பால் காலிங்வுட் (6), சமித் படேல் (3*) சற்று நிதானமாக விளையாடி சீரான இடைவெளியில் பெவிலியன் திரும்பினர். மறுபுறம் அதிரடி காட்டிய ஜாக் காலிஸ் 78* ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

முதலிடத்தை பறிகொடுத்த மும்பை இந்தியன்ஸ்…, 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி!!

இதனால், வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை குவித்திருந்தது. இதையடுத்து, வெற்றி இலக்கை துரத்தி களமிறங்கிய ஆசியா லென்ஸ் அணியின் உபுல் தரங்கா (57), திலகரத்ன டில்ஷான் (58) என முதல் விக்கெட்டுகே 115 ரன்கள் எடுத்து அசத்தினர். இதனை தொடர்ந்து, திலகரத்ன டில்ஷான் (9*), அப்துல் ரசாக் (3) மற்றும் மிஸ்பா-உல்-ஹக் (9*) ரன்கள் எடுக்க ஆசியா லென்ஸ் அணியானது 16.1 ஓவரிலேயே 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here