அஜித்துக்கு சினிமா Chance வாங்கிக் கொடுத்ததே நான் தான்.., நன்றியை மறந்துட்டாரு.., கண்கலங்கிய போண்டா மணி!!

0
அஜித்துக்கு சினிமா Chance வாங்கிக் கொடுத்ததே நான் தான்.., நன்றியை மறந்துட்டாரு.., கண்கலங்கிய போண்டா மணி!!
அஜித்துக்கு சினிமா Chance வாங்கிக் கொடுத்ததே நான் தான்.., நன்றியை மறந்துட்டாரு.., கண்கலங்கிய போண்டா மணி!!

நடிகர் போண்டா மணி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் அஜித்தை குறித்து பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் போண்டா மணி:

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வந்தவர் தான் நடிகர் போண்டா மணி. இவர் வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். குறிப்பாக வடிவேலு படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார். கடந்த ஆண்டு சிறுநீரக பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி திரையுலகம் தனது சிகிச்சைக்கு உதவ வேண்டும் என வீடியோக்கள் மூலம் கோரிக்கையும் வைத்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அஜித்தை குறித்து பேசியுள்ளார். அதாவது, அவர் பேசியதாவது, எனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்ததும், விஜய் சேதுபதி, தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் எனக்கு உதவினார்கள். ஆனால் வடிவேலு எட்டி கூட பார்க்கவில்லை.

அதே போல் அஜித்தும் உதவவில்லை. அவருக்கு ஆரம்பத்தில் பல உதவிகள் செய்தேன். அவருக்கு பட வாய்ப்புகள் வாங்கி கொடுத்ததே நான் தான். மைனர் மாப்பிள்ளை என்ற படத்தில் நான் தான் வாங்கிக்கொடுத்தேன். படிப்படியாக உயர்ந்த பின் நன்றியை மறந்து விட்டார். எவ்வளவோ தகவல் கொடுத்தேன் help கேட்டு ஆனால் கடைசி வரை அவர் help பண்ணவில்லை என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here