26 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 2 லட்சத்தை நெருங்கும் உயிர்பலி – உலக நாடுகளில் கொரோனா ஒரு பார்வை..!

0

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்தை நெருங்கி உள்ளது. வைரஸ் பரவலால் உலக நாடுகளில் பொருளாதாரம் கடுமையாக முடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா படுத்தும்பாடு:

உலகில் முதன்முதலில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹவான் நகரில் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டது. ஆனால் அப்போது இந்த வைரஸ் உலக நாடுகளில் இத்தகைய விளைவுகளை ஏறபடுத்தும் என ஒருவரும் நினைத்திருக்க மாட்டர். தினமும் வேலை, வேலை என ஓடிக்கொன்டு இருந்த மக்கள் தற்போது வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஆனால் வைரஸ் பரவ காரணமான சீனாவில் இதன் தாக்கம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு தற்போது இயல்பு நிலைக்கு அந்நாட்டு மக்கள் திரும்பி வருகின்றனர்.

2 லட்சத்தை நெருங்கும் பலி:

உலகளவில் இதுவரை 2,638,477 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 184,248 ஆக உள்ளது. மேலும் இதுவரை 721,997 பேர் இந்த வைரஸின் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து உள்ளனர். உலகளவில் அமெரிக்கா தான் கொரோனா தாக்கத்தில் அதிக பாதிப்பு மற்றும் உயிர் இழப்புகளுடன் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

நாடு வாரியாக விபரம்:

அமெரிக்காவில் இதுவரை 849,092 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இதுவரை 47,681 பேர் உயிர் இழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஸ்பெய்னில் 208,389 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 21,717 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இத்தாலியில் 187,327 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 25,085 பேர் உயிர் இழந்துள்ளனர். சீனாவில் இதன் தாக்கம் தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அங்கு 82,798 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 4,632 பேர் உயிர் இழந்து உள்ளனர். இங்கிலாந்தில் 133,495 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 18,100 பேர் உயிர் இழந்துள்ளனர்.

ஜெர்மனி நாட்டில் இந்த வைரஸ் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 150,648 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 5,315 பேர் உயிர் இழந்து உள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸால் 159,877 பேர் பாதிக்கப்பட்டும் 21,340 பேர் உயிரிழந்து உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here