சர்வதேச டேபிள் டென்னிஸ்: அரையிறுதிக்குள் நுழைந்த மணிகா பத்ரா மற்றும் சத்யன் ஜோடி!!

0
சர்வதேச டேபிள் டென்னிஸ்: அரையிறுதிக்குள் நுழைந்த மணிகா பத்ரா மற்றும் சத்யன் ஜோடி!!
சர்வதேச டேபிள் டென்னிஸ்: அரையிறுதிக்குள் நுழைந்த மணிகா பத்ரா மற்றும் சத்யன் ஜோடி!!

சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் மணிகா பத்ரா மற்றும் சத்தியன், ஸ்பெயின் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்துள்ளனர்.

சர்வதேச டேபிள் டென்னிஸ்:

கத்தார் தலைநகரம் தோகாவில், சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியா சார்பாக நட்சத்திர வீரர்களான மணிகா பத்ரா மற்றும் சத்யன் ஞானசேகரன் ஜோடி கலப்பு இரட்டையர் பிரிவில் கலந்து கொண்டனர். இன்று காலிறுதி போட்டியில், ஸ்பெயினின் மரியா சியாவோ மற்றும் அல்வாரோ ரோபிள் ஜோடிக்கு எதிராக இந்திய ஜோடி விளையாடியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில், இந்தியாவின் மணிகா பத்ரா மற்றும் சத்யன் ஞானசேகரன் ஜோடி, ஆரம்பம் முதலே தனது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியது. 23 நிமிடம் 28 வினாடிகள் நீடித்த இந்த போட்டியை, இந்திய ஜோடி 11-9, 11-9 மற்றும் 11-5 என்ற புள்ளிக்கணக்கில் (3-0) என அபாரமாக வென்றது.

மகாபாரதம் சீரியல் கர்ணனுக்கு இவ்ளோ அழகான மனைவியா? ஒரே மகளுடன் அவரே வெளியிட்ட போட்டோ!!

இந்த போட்டியில் இந்திய ஜோடி வெற்றி பெற்றதன் மூலம், அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இன்று இரவு நடைபெற உள்ள அரையிறுதியில், தென் கொரியாவின் எல்ஐஎம் ஜாங்ஹூன் மற்றும் அவதார் ஷின் யூபினுக் ஜோடியை மணிகா பத்ரா மற்றும் சத்யன் ஞானசேகரன் ஜோடி எதிர்கொள்ள இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here