கைல இருக்க babyய விட காஜல் பேபி ரொம்ப அழகா இருக்கேப்பா.., அவரே வெளியிட்ட போட்டோ கிளிக்!!

0
கைல இருக்க babyய விட காஜல் பேபி ரொம்ப அழகா இருக்கேப்பா.., அவரே வெளியிட்ட போட்டோ கிளிக்!!
கைல இருக்க babyய விட காஜல் பேபி ரொம்ப அழகா இருக்கேப்பா.., அவரே வெளியிட்ட போட்டோ கிளிக்!!

நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள நிலையில், தற்போது அந்த புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.

நடிகை காஜல் அகர்வால்:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித், கமல், தனுஷ், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் போட்டி போட்டு நடித்துள்ளார். தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு திரையரங்கில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் காஜல், திடீரென தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 19ம் தேதி பிறந்தது. குழந்தை பிறந்ததற்கு பிறகும் காஜல் அழகு குறையாமல் அப்படியே இருந்து வருகிறார். தனது குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டு வைரல் ஆக்கினார். இந்நிலையில் காஜல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

சர்வதேச டேபிள் டென்னிஸ்: அரையிறுதிக்குள் நுழைந்த மணிகா பத்ரா மற்றும் சத்யன் ஜோடி!!

அதாவது தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, கடவுள் கொடுத்த என் மகன் மூலம் நான் படுகிற சந்தோஷம் மற்றும் துக்கம் போன்றவைகளை பார்க்கிறார். மேலும் கடந்த 9 மாத மட்டுமின்றி இனி வர இருக்கும் காலத்திற்கும் கடவுளுக்கு நன்றியுடன் இருக்கிறோம். இதனை தொடர்ந்து என் அன்பு மகனுக்கு 3/4 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here