உலக அளவில் முதலிடத்தை பிடித்த ஜடேஜா …! – ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி !!!

0

ஐ.சி.சி வெளியிட்ட ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா உலக அளவில் முதலிடத்தை பிடித்து உள்ளார். ஏற்கனவே முதலிடத்தில் இருந்த ஜேசன் ஹோல்டரை ஒரு சில புள்ளிகள் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி இவர் முன்னேறியுள்ளார்.

சமீபத்தில் ஐ.சி.சி ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் வீரர்களின் புள்ளிகள் அடிப்படையில் அவர்கள் வகைப்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் இந்த தரவரிசையில் முதல் இடத்தில்  மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் இருந்தார். தற்போது வெளியாகி உள்ள தரவரிசை பட்டியல்  படி இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தை பிடித்து உள்ளார்.

அதன்படி, ரவீந்திர ஜடேஜா அவர்கள் 386 புள்ளிகளுடன் முதல் இடத்திலும்,384 புள்ளிகள் பெற்று ஜேசன் ஹோல்டர் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் நான்காவது இடத்தில் உள்ளார். மேலும் இதன் மூலம் உலக அளவில் நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் என்ற பெருமையை இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here