உலக கோப்பை போருக்கு தயாரான இந்தியா…, ஸ்பெயின் அணிக்கு எதிராக முதல் யுத்தம்…, அணி விவரம் உள்ளே!!

0
உலக கோப்பை போருக்கு தயாரான இந்தியா..., ஸ்பெயின் அணிக்கு எதிராக முதல் யுத்தம்..., அணி விவரம் உள்ளே!!
உலக கோப்பை போருக்கு தயாரான இந்தியா..., ஸ்பெயின் அணிக்கு எதிராக முதல் யுத்தம்..., அணி விவரம் உள்ளே!!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் இன்று முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடரானது சொந்த மண்ணில் நடப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை தரக்கூடியதாக இருக்கும். ஆனாலும், கடந்த 48 ஆண்டுகால உலக கோப்பை கனவை நிறைவேர்த்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும், இந்திய அணியானது, கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று பதக்கத்திற்கான 41 ஆண்டு கால ஏக்கத்தை தீர்த்தது. இதே போல, காமன்வெல்த் போட்டியிலும், இந்திய ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தது. இதனால், சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் இந்த உலக கோப்பையும் இந்திய அணி வென்று வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதான் தனது கடைசி சர்வதேச போட்டி…, ஓய்வை அறிவித்த கிரிக்கெட் நட்சத்திரம்!!

இந்திய அணியானது இந்த உலக கோப்பை தொடரில், குரூப் Dயில் இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் வேல்ஸ் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதில், ஸ்பெயின் அணிக்கு எதிராக இன்று இரவு 7 மணிக்கு இந்திய அணி தனது முதல் யுத்தத்தை தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை, 2022 ஆண்டிற்கான சிறந்த வீரர் என்ற விருதை வென்ற ஹர்மன்பிரீத் சிங் வழி நடத்த உள்ளார்.

இந்திய அணி விவரம்
  • கோல்கீப்பர்கள் : கிரிஷன் பகதூர் பதக், பி ஆர் ஸ்ரீஜேஷ்
  • டிஃபெண்டர்கள் :ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), ரோஹிதாஸ் (துணை கேப்டன்), ஜர்மன்பிரீத் சிங், வருண் குமார், சுரேந்தர் குமார், அமித் நிலம் சஞ்சீப் செஸ்
  • மிட்பீல்டர்கள் : மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங், விவேக் சாகர் பிரசாத், ஆகாஷ்தீப் சிங்
  • ஃபார்வட்ஸ்: லலித் குமார் உபாத்யாய், மந்தீப் சிங், சுக்ஜீத் சிங், அபிஷேக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here