உலக கோப்பைக்கான இந்திய படை தயார்…, புதிய கேப்டனானார் ஷஃபாலி வர்மா!!

0
உலக கோப்பைக்கான இந்திய படை தயார்..., புதிய கேப்டனானார் ஷஃபாலி வர்மா!!
உலக கோப்பைக்கான இந்திய படை தயார்..., புதிய கேப்டனானார் ஷஃபாலி வர்மா!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பாக, சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவில், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவங்களிலும் உலக கோப்பை தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில், முதன் முதலாக 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான டி20 உலக கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐசிசியானது திட்டமிட்டுள்ளது. இதன்படி, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட 16 அணிகள் பங்கு பெற உள்ள இந்த தொடர் அடுத்த மாதம் (ஜனவரி) 14 ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த 16 அணிகள், 4 குரூப்களின் கீழ் தலா 4 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குரூப்பில் உள்ள 4 அணிகளும் லீக் சுற்றுகள் போல் முதலில் போட்டி போட்டு கொள்ள உள்ளன. இந்த லீக் சுற்றுகள் முடிவில் சூப்பர் 12 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, அரையிறுதி, இறுதிப் போட்டிகள் நடைபெறும். இந்த தொடருக்கு முன் இந்திய U19 மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த இரு தொடருக்கான இந்தியா அணியையும், நட்சத்திர வீராங்கனையான ஷஃபாலி வர்மா வழி நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

உலக கோப்பைக்கான U19 மகளிர் இந்திய அணி: ஷஃபாலி வர்மா (கேப்டன்), ஸ்வேதா செஹ்ராவத் (துணை கேப்டன்), ரிச்சா கோஷ் (WK), ஜி த்ரிஷா, சௌமியா திவாரி, சோனியா மெஹதியா, ஹர்லி காலா, ஹர்ஷிதா பாசு (WK) , சோனம் யாதவ், மன்னத் காஷ்யப், அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா, டைட்டாஸ் சாது, ஃபலக் நாஸ், ஷப்னம் எம்.டி.

SA T20 லீக்குக்கான இந்திய U-19 மகளிர் அணி: ஷஃபாலி வர்மா (கேப்டன்), ஸ்வேதா செஹ்ராவத் (துணை கேப்டன்), ரிச்சா கோஷ் (WK), ஜி த்ரிஷா, சௌமியா திவாரி, சோனியா மெஹதியா, ஹர்லி காலா, அர்ச்சனா தேவி, ஹர்ஷிதா பாசு (WK), சோனம் யாதவ் , மன்னத் காஷ்யப், பார்ஷவி சோப்ரா, டைட்டாஸ் சாது, ஃபலாக் நாஸ், ஷப்னம் எம்.டி., ஷிகா, நஜ்லா சி.எம்.சி., யஷா ஸ்ரீ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here