7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்து சாதனை படைத்த பெண்.., குவியும் வாழ்த்துக்கள்!!

0
7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்து சாதனை படைத்த பெண்.., குவியும் வாழ்த்துக்கள்!!
7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்து சாதனை படைத்த பெண்.., குவியும் வாழ்த்துக்கள்!!

கடந்த 7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் வழங்கி, இளம் பெண் ஒருவர் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

தாய்ப்பால் தானம்:

இப்பொழுது இருக்கும் காலத்தில் பேஷன் என்ற பெயரில் சில தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை குறைத்து கொள்கின்றனர். இதனால் இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. இதையடுத்து குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிக்க வேண்டியது அவசியம் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட”தாய்ப்பால் வங்கி” வாயிலாக சென்னையில் கடந்த 7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் வழங்கி பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் தீவிரமெடுக்கும் டெங்கு காய்ச்சல்.,,அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடல்..அதிரடி உத்தரவு!!

அதாவது 29 வயதான அந்த பெண்ணின் பெயர் சிந்து மோனிகா. இவர் கோயம்புத்தூரில் உள்ள கனியூரை சேர்ந்தவர். மேலும் பொறியியல் பட்டதாரியான இவர் பல பச்சிளம் குழந்தைகள் பயன் பெறும் விதமாக கடந்த 7 மாதங்களாக 50 ஆயிரம் மில்லி தாய்ப்பாலை ஸ்டோர் செய்து கோவை அரசு மருத்துவமனைக்கு தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக வழங்கி வந்துள்ளார். இதன் மூலம் 1,400க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர். இதையடுத்து இவரின் சாதனையை ஆசிய மற்றும் இந்திய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்துள்ளது. மேலும் இவரின் இந்த செயலுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here