ஆன்லைன் லோன் ஆப்க்கு எதிராக வழக்கு., தற்கொலைக்கு தூண்டியதாக மனு – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

0
ஆன்லைன் லோன் ஆப்க்கு எதிராக வழக்கு., தற்கொலைக்கு தூண்டியதாக மனு - உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
ஆன்லைன் லோன் ஆப்க்கு எதிராக வழக்கு., தற்கொலைக்கு தூண்டியதாக மனு - உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

ஆன்லைன் கடன் செயலிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், இந்திய ரிசர்வ் வங்கி செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

பரபரப்பு உத்தரவு:

வளர்ந்து வரும் நவீன யுகத்தில், மொபைல் வாயிலாக சகலமும் ஒருவருக்கு கிடைக்கிறது. அந்த வகையில், மொபைல் லோன் ஆப் வாயிலாக, பயனர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. ஆனால், இதன் மூலம் பயனர்களுக்கு கடன் வழங்கி விட்டு பின்பு சம்பந்தபட்டவர்கள் அளவுக்கு மீறி அதனை கட்ட சொல்லி வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது போக, இந்த ஆப் வழியாக கடன் பெற்றவர்களின் புகைப்படங்களை மர்ம நபர்கள் தேவை இல்லாமல் ஆபாசமாக சித்தரித்து, தற்கொலைக்கு தூண்டுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இது குறித்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்து சாதனை படைத்த பெண்.., குவியும் வாழ்த்துக்கள்!!

அதாவது, இது போன்ற லோன் ஆப் களுக்கென்று விதிகளை உருவாக்க வேண்டும் எனவும், இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி செயலாளர், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் விரைவில் இந்த செயலிகளுக்கு, கட்டுப்பாடுகள் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here