கொரோனா தடுப்பூசி செலுத்திய மாணவர்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதியா???

0
Row Covid-19 or Coronavirus vaccine flasks on white background

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட மாணவர்கள் மட்டுமே பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை எழுத அனுமதிக்கவேண்டும் என்று சமூக வலைத்தளமான ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை எவ்வாறு நடத்தலாம் என மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் ஆலோசித்து வருகின்றனர். இது சம்மந்தமாக  மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால், அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசித்தார்.

 

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ், தனது ட்விட்டர் பக்கத்தில் “தடுப்பூசி இல்லையென்றால் தேர்வுகளும் இல்லை” என பதிவிட்டுள்ளார். டெல்லி முதலமைச்சர் மனிஷ் சிசோடியாவும், “மாணவர்கள் முதலில் தடுப்பூசி செலுத்திய பின்னரே, தேர்வுகள் நடத்தப்படவேண்டும். நாடு முழுவதும் 1.5 கோடிக்கு மேற்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உள்ளனர், அவர்களில் 95 சதவீதம் பேர் பதினேழு வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்களுக்கு கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் தடுப்பூசிகளை வழங்க முடியுமா என்று மத்திய அரசு நிபுணர்களுடன் ஆலோசிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாம் என மத்திய அரசு முன்னர் தெரிவித்து இருந்தது. பின்னர் கொரோனா தொற்று அதிகமான காரணத்தினால் வயது வரம்பை தளர்த்தி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் டெல்லி துணை முதல்வர்ம னிஷ் சிசோடியா தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here