பாரதி கண்ணம்மா லட்சிமியின் நிஜ அம்மாவை பார்த்திருக்கீங்களா?? வைரலாகும் புகைப்படம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவின் மகளாக நடிக்கும் லட்சிமியின் அப்பா அம்மாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு மகளாக நடித்து வருபவர் தான் லட்சுமி. இவர் வேறு யாருமில்லை சன் டிவியில் கோலங்கள் முதல் தென்றல் வரை பல ஹிட் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஷாம் மகள் தான் லட்சுமி. இவரின் உண்மையான பெயர் ரக்சா.

இவரது அக்கா ஏற்கனவே கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்திருந்தவர். தற்போது அவர் செந்தூரப்பூவே சீரியலிலும் நடித்து வருகிறார். அக்காவும், தங்கச்சியும் விஜய் டிவியிலேயே செட்டிலும் ஆகி விட்டனர். ரக்சா சின்ன குழந்தையாக இருந்தாலும் நடிப்பில் குறை வைக்கவே இல்லை. ஏற்கனவே இவர் சிவகார்த்திகேயனுடன் ரெமோ படத்தில் நடித்தவர்.

இப்பொழுது கண்ணம்மாவின் மகளாக பலரையும் மிரட்டியும், தன் அம்மாவின் மேல் அதிக பாசமுடனும் இருந்து வருகிறார். அதனாலேயே லக்ஷ்மியை அனைவர்க்கும் பிடித்து போனது. இப்பொழுது நாம் அனைவரும் லக்ஷ்மியின் அம்மாவை பார்த்திருக்கிறோம். ஆனால் அவரின் அம்மாவை பார்த்திருக்க மாட்டோம். இந்நிலையில் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here