இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0
red alert
red alert

நாட்டில் கடந்த சில தினங்களாகவே வானிலை நிலவரம் சற்று மோசமாக இருந்து வருகிறது. தற்போது இதனை தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் உள்ள 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்:

இந்தியா முழுவதும் கடந்த சில வாரமாகவே புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் மட்டுமே இரண்டு புயல்கள் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் மே மாதங்களில் வெயில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி மக்களை வாட்டிவதைத்து வரும். ஆனால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் மழை பெய்து வருகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதுவும் வழக்கத்துக்கு மாறாக மிக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் கம்பங்கள் சரிந்து மரங்கள் சரிந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதன்படி தற்போது டவ்தே புயல் சில தினங்களுக்கு முன்பு வந்து சென்ற நிலையில் தற்போது யாஷ் என்னும் புயல் உருவாகி வருகிறது. இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

red alert
red alert

‘உங்களுக்கு என்ன பா Work From Home ஜாலியா இருக்கீங்க’ – கதறும் பிக் பாஸ் பிரபலம்!!

அதன்படி இன்று(மே 25) மற்றும் நாளை ஒடிசா மாநிலத்தின் கேந்திரபாரா, பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் பாலசூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் மிக அதிக கன மழை பெய்ய உள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் மயூர்பன்ச், ஜாஜ்பூர், கட்டாக், கோர்த்தா மற்றும் பூரி அஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யவுள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ் அலர்ட் என்றும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here