சிலிண்டர் விலை ரூ.600 ஆக குறைப்பதில் இவ்வளவு சிக்கல் இருக்கிறதா?? சீமான் பகிரங்க கேள்வி!!

0
சிலிண்டர் விலை ரூ.600 ஆக குறைப்பதில் இவ்வளவு சிக்கல் இருக்கிறதா?? சீமான் பகிரங்க கேள்வி!!

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை அடுத்து அனைத்து கட்சிகளும் பல வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று திமுகவின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். அதில் மாணவர்களின் கல்வி கடன் ரத்து, சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு ஆகியவற்றை இடம் பெற்று இருந்தன.

இது குறித்து பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். அதில் சிலிண்டர் விலை 600 ரூபாயை யாரிடம் சொல்லிக் குறைப்பார்கள், கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இன்னும் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று திமுக சொல்லி வருகிறது. 50 லட்சம் கையெழுத்துகளை வாங்கி யாரிடம் கொடுத்தார்கள்? என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு நற்செய்தி., உங்க இஷ்டத்துக்கு பில் செலுத்தலாம்? ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here