மத்த டீம் லா வேஸ்ட் CSK தான் பெஸ்ட் – தோனி குறித்து வாட்சன் நெகிழ்ச்சி..!

0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கடந்த சீசனில் தான் சரியாக ஆடாத போதும் தன் மீது நம்பிக்கை வைத்த தோனி பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

சென்னை அணி கேள்வி..!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் வீரர்களிடம் சமூக வலைதளங்களில் பேட்டி எடுத்து ஒளிபரப்பி வருகிறது. சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்ற அணிகளிடம் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார் ஷேன் வாட்சன்.

ஏன் இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் ‘Sledging’ செய்ய அஞ்சுகின்றனர் – இதான் காரணம் மைக்கேல் கிளார்க் Open Talk..!

நம்பிக்கை வைத்த தோனி..!

கடந்த சீசன் முழுவதும் நான் நன்றாக பேட்டிங் செய்ததாகவே நினைத்தேன். ஆனால் ரன் குவிக்கவில்லை. அது அப்படியே நீடித்துக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் இன்னும் இரண்டு போட்டிகளில் அவர்கள் என்னை நீக்கி விடுவார்கள் என நினைத்தேன். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.

பின்னர் ஒரு கட்டத்தில் விஷயங்கள் மாறியது அப்போது நான் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு தோனி மற்றும் பிளெம்மிங்கிற்கு நன்றி கூறினேன். அவர்கள் என் மீது எந்த சந்தேகமும் ஏற்படவில்லை என்றார்கள் எனக் கூறினார் வாட்சன்.

அருமையான தலைமை..!

மற்ற அணிகள் என்றால் உங்கள் கதை முடிந்தது. வந்ததற்கு நன்றி நீங்கள் வெளியே தான் உட்கார வேண்டும். மேலும் ட்ரிங்க்ஸ் கொடுக்க செல்ல வேண்டும். ஆனால் சென்னை அணி அற்புதமானது என்னை 10 அடி உயரத்திற்கு உயர்த்திச் சென்றது அதுதான் அருமையான தலைமையின் சக்தி. எப்போது ஒருவரை நம்ப வேண்டும் என தெரிந்து வைத்திருப்பது அபாரமான விஷயம். அவர்களுக்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்.

10 போட்டிகளில் ரன்னே எடுக்காவிட்டாலும் தொடர்ந்து அணியில் தேர்வு செய்யப்படுவீர்கள். கடந்த சீசனில் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு தோனி மற்றும் ஸ்டீபன் பிளெம்மிங்கிற்கு நன்றி என சிஎஸ்கே அணியின் சிறப்பு பற்றி கூறி தோனிக்கு நன்றி கூறினார் வாட்சன்.

ஐ.பி.எல் தொடரில் எந்த டீம் கெத்து – சி.எஸ்.கே வா..? மும்பையா..? மஞ்ரேக்கர் Open Talk..!

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here