ஆலயங்களில் பக்தர்கள் ஹரஹரா கோஷம் போடுவது ஏன் தெரியுமா??

0

நாம் என்ன கஷ்டம் என்றாலும் முதலில் செல்வது ஆலயங்களுக்கே. அங்கு சென்றால் மன அமைதி கிடைக்கும். மேலும் நாம் ஆலயங்களிலும், திருவிழா நாட்களிலும் பக்தர்கள் ஹரஹரா என்று கோஷம் போடுவது ஏன்? என்பது பலருக்கு புரிவதில்லை. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

ஹரஹரா கோஷம்

மனிதனுக்கு எந்த சூழ்நிலைகளில் அதாவது சந்தோசம் என்றாலும், துக்கம் என்றாலும் அதனை வெளிப்படுத்த அவன் ஒலிகளின் மூலமே வெளிப்படுத்துவான். மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் ஒலிகளிலேயே வெளிப்படுத்தும். குறிப்பாக குரங்குகள் 162 வகை ஒலிகளை பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பக்தி பெருக்கெடுத்து, உணர்ச்சி வெள்ளம் பொங்கி வழியும் போது தான் இந்த ஹரஹரா கோஷம் செய்யப்படுகிறது.கோஷத்தை கேட்பவர்கள் கூட பக்தி உணர்ச்சிக்கு ஆட்படலாம். ஹர என்ற சொல் பாவங்களை போக்குதல் என்று பொருள்படும். ஹர ஓம் ஹர என்பது தான் மறுவி தமிழில் ஹரஹரா என்று அமைந்து இருக்கிறது. இந்த ஒலியை கூட்டமாக சேர்ந்து எழுப்புவதனால் மனமானது தூய்மையடைகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here