நீண்ட நேரம் வேலை பார்த்தால் உயிர் போகுமா?? – அதிர்ச்சி அளித்த உலக சுகாதார அமைப்பு!!!

0
நீண்ட நேரம் வேலை பார்த்தால் உயிர் போகுமா?? - அதிர்ச்சி அளித்த உலக சுகாதார அமைப்பு!!!
நீண்ட நேரம் வேலை பார்த்தால் உயிர் போகுமா?? - அதிர்ச்சி அளித்த உலக சுகாதார அமைப்பு!!!
நீண்ட நேரம் வேலை செய்வது ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பறிப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் 2016 ஆம் ஆண்டில் நீண்ட வேலை பார்த்தவர்களில் 7,45,000 பேர் பக்கவாதம் மற்றும் இதய நோயால் இறந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டு உள்ளது.
உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, 2000 முதல் 2016 ஆம் ஆண்டு தரவுகளை அடிப்படையாக கொண்டு 194 நாடுகளில் ஒரு ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வில், வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் வேலை செய்வது கடுமையான உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வராக  அதிக நேரம் வேலை செய்து பலியானவர்களில் 72 சதவீதம் பேர் ஆண்கள் ஆகும்.இந்த ஆய்வின் இறுதியில் சீனா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் சுகாதாரத் துறையின் இயக்குநர் மரியா நெய்ரா தெரிவித்து உள்ளார்.
அதிர்ச்சி அளித்த உலக சுகாதார அமைப்பு!!!
அதிர்ச்சி அளித்த உலக சுகாதார அமைப்பு!!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அவர் இந்த ஆய்வு 2000 முதல் 2016 ஆம் ஆண்டு அடிப்படையிலான தரவுகளின் படி எடுக்கப்பட்டது எனவும் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை உலகம் முழுவதும் கடுமையான தாக்கத்தை உருவாக்கி உள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர்.  இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட இந்த தகவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here