முன்பதிவு செய்த தடுப்பூசிகள் ரத்து செய்யப்படமாட்டாது – மத்திய சுகாதாரத்துறை அறிக்கை!!

0
முன்பதிவு செய்த தடுப்பூசிகள் ரத்து செய்யப்படமாட்டாது - மத்திய சுகாதாரத்துறை அறிக்கை!!
முன்பதிவு செய்த தடுப்பூசிகள் ரத்து செய்யப்படமாட்டாது - மத்திய சுகாதாரத்துறை அறிக்கை!!

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக வழங்கப்படும் கோவிஷுட்டில் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் டோஸிற்கு நடுவே உள்ள கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி:

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் கொரோனா பரவளின் சங்கிலியை உடைப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் முதல் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக தடுப்பூசி வழங்கும் பணிகளும் வேகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் தடுப்பூசிகளை இரண்டு டோஸாக செலுத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் செலுத்துவதற்கான காவ அவகாசம் 84 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது மக்கள் அனைவருக்கும் ஓர் சந்தேகம் எழுந்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி:
கோவிஷீல்டு தடுப்பூசி:

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி முறையாக வழங்கப்படுமா அல்லது அவர்களுக்கும் 84 நாட்களுக்கு பின்பு தான் வழங்கப்படுமா என்று குழம்பி வந்தனர்.தற்போது இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு இரண்டாம் டோஸ் ரத்து செய்ப்படமாட்டாது என்றும் அது முறையாக செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இனி முன்பதிவு செய்பவர்களுக்கு 84 நாட்களுக்கு பின்பே முன்பதிவு செய்வதற்கான இணையதளம் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here