கிராமங்களில் பரவும் கொரோனா வைரஸ் – புதிய வழிகாட்டுதலை வெளியிட்ட மத்திய அரசு!!

0
கிராமங்களில் பரவும் கொரோனா வைரஸ் - புதிய வழிகாட்டுதலை வெளியிட்ட மத்திய அரசு!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கிராம புறங்களில் கொரோனா நோய்பரவல் அதிக அளவில் காணப்பட்டு வரும் நிலையில் தற்போது இதனை தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ்:

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக மோசமாக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை நகரங்களில் மிக அதிக அளவில் காணப்பட்டு வந்த கொரோனா தற்போது கிராம புறங்களிலும் காணப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது இதனை தடுப்பதற்காக புதிய வழிகாட்டுதலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்பதிவு செய்த தடுப்பூசிகள் ரத்து செய்யப்படமாட்டாது – மத்திய சுகாதாரத்துறை அறிக்கை!!

புதிய வழிகாட்டுதல்:

வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும் நோயாளிகள் அறிகுறி ஏற்பட்ட நாளில் இருந்து 10 நாட்களுக்கு பின்பே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு 3 நாட்கள் காய்ச்சல் இல்லாமல் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தனிமைப்படுத்துதலின் காலம் முடிந்த பின்பு பரிசோதனை மேற்கொள்ள அவசியமில்லை.கிராமங்களில் உள்ள சுகாதார மற்றும் ஊட்டச்சத்து குழுவினரின் உதவியுடன் சுகாதாரத்துறை பணியாளர்கள் இன்ப்ளூயன்சா நோய் மற்றும் கடுமையான சுவாச தொற்று இருக்கிறதா என கண்காணிக்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

புதிய வழிகாட்டுதல்:
புதிய வழிகாட்டுதல்:

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அறிகுறி உள்ளவர்கள் பகுதியில் உள்ள சுகாதார அதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளலாம். இணை நோய் மற்றும் ஆக்சிஜன் செறிவு குறைவாக இருப்பவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செறிவு கண்காணிப்பது மிக அவசியம் இதற்காக அனைத்து கிராமங்களிலும் போதுமான அளவு பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மா மீட்டர்கள் இருக்க வேண்டும்.பல்ஸ் ஆக்சிமீட்டர்கள், தெர்மாமீட்டர்கள் மூலம் தொற்று நோய் பாதிப்பின் எண்ணிக்கை மற்றும் அதன் உயர்வை பொறுத்து பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here