இன்று உருவாகும் புயல் – அடுத்த 2 நாட்களுக்கு துவம்சம் செய்யப்போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் பகீர்!!

0
இன்று உருவாகும் புயல் - அடுத்த 2 நாட்களுக்கு துவம்சம் செய்யப்போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் பகீர்!!

வடக்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று புயலாக மாற வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று புயல்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்.10ம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அன்றைய தினத்திலிருந்து, தென்கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வடக்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அது இன்று ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலம், அக்.23ம் தேதியான இன்று புயலாக மாறினால், அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின் இந்த புயல், வருகிற அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை வேளையில் மேற்குவங்க கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்ம அனிகாவா இது., சேலையில யாரடி நீ மோகினி நயன் மாதிரி இருக்கீங்க! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட இந்த புயல் எச்சரிக்கை பொது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த புயல் பாதிப்பின் தாக்கம் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், அண்டை மாநிலமான மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது, மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here