தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கு குட் நியூஸ் – கூடுதல் வசதி அறிவிப்பு! நிர்வாகம் அதிரடி!!

0
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கு குட் நியூஸ் - கூடுதல் வசதி அறிவிப்பு! நிர்வாகம் அதிரடி!!
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கு குட் நியூஸ் - கூடுதல் வசதி அறிவிப்பு! நிர்வாகம் அதிரடி!!

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொது மக்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

தெற்கு ரயில்வே

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளி மாநிலங்களில் வேலை செய்யும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். மேலும் இந்த வருட தீபாவளி ஞாயிற்றுக்கிழமையான நாளை வருவதால் பல்வேறு நிறுவனங்களில் நான்கு நாட்களுக்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளி ஊரில் தங்கி வேலை பார்க்கும் நபர்கள் தங்களது சொந்த ஊருக்கு படை எடுக்க ஆரம்பித்து விட்டனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஏற்கனவே இவர்கள் ஊர் திரும்புவதற்கு, கூடுதல் சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சொந்த ஊர் திரும்புபவர்களுக்கு ஏதுவாக தெற்கு ரயில்வே 2 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு வரும் 25ம் தேதி ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மறுநாள் காலை பெங்களூருக்கு 9.30 மணிக்கு சென்றடையும். அதே ரயில் வரும் 26 ஆம் தேதி காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 12.20 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.

தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளி கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு!!

இந்த இந்த ரயில் திருநெல்வேலி. கோவில்பட்டி, சாத்தூர். விருதுநகர், சேலம், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஜோலார்பேட்டை வழியாக செல்ல உள்ளது. அதே போன்று மற்றொரு சிறப்பு ரயில் கொஞ்சுவேலியில் இருந்து தாம்பரத்திற்கு வரும் 25ம் தேதி காலை 11.40 மணிக்கு இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மறுநாள் காலை தாம்பரத்திற்கு 6.20 மணிக்கு சென்றடையும். அதே ரயில் வரும் 26 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.30 மணிக்கு கொஞ்சுவேலிக்கு சென்றடையும். ரயில்வேயின்இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here