தமிழகத்தின் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
heavy rain in tn
heavy rain in tn

குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த சுழற்சி நிலை காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை வரும் 13 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வானிலை

தமிழக்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வறண்ட வானிலையே காணப்பட்டு வருகின்றது. அதே போல் இன்னும் சில நாட்களில் தீவிரமாக வெயில் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 நாட்களுக்கான வானிலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அஸ்வின், ஷிவாங்கி நட்பா?? காதலா?? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!!

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள குமாரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த சுழற்சி நிலை காரணமாக இன்று தென் தமிழக கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் எப்போதும் போலவே வறண்ட வானிலையே நிலவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

TN has received 56% more rain during monsoon, says minister Udhayakumar- The New Indian Express

நாளை முதல் 13 ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here