திருச்சியில் கணக்கில் காட்டப்படாத 3 லட்சம் ரூபாய் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி!!

0
AppleMark

தேர்தல் பணிக்காக நடத்திய வாகன தணிக்கையாளர்கள் சோதனையில் பறக்கும் படையினர் 3 லட்சத்திற்கும் அதிகமான தொகையினை பறிமுதல் செய்துள்ளனர். முறையான ஆவணங்கள் இல்லாததால் இந்த பணத்தினை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் பட்டுவாடா

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. இதற்கான தீவிரமான பணிகளில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகின்றது. தேர்தலுக்காக மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட கூடாது என்பதற்காக அதிகாரிகள் வாகன சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

அதில் ஒரு பகுதியாக திருவெறும்பூர் பகுதியில் வட்டாட்சியர் அசோக் குமார் தலைமையில் பறக்கும் படையினர் வாகன தணிக்கை மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கந்தர்வகோட்டை பகுதியினை சேர்ந்த காந்திநாதன் என்பவர் காய்கறிகளுடன் 3 லட்சத்தி 82 ஆயிரம் ரூபாயினை எடுத்து சென்றுள்ளார். அதில் 1 லட்சத்தி 2 ஆயிரம் ரூபாய் கணக்கில் காட்டப்படவில்லை என்பது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

The radicalisation of Tamil Nadu and what is keeping the NIA busy there - Oneindia News

இதனை அடுத்து அவரிடம் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் விசாரணை செய்துள்ளனர். அவர் காய்கறிகள் வாங்குவதற்காக தான் இந்த பணத்தினை எடுத்து செல்வதாக கூறியுள்ளார். இதே போல் தஞ்சாவூர் அருகே உள்ள பகுதியிலும் சங்கர் என்பவரிடம் இருந்து 2 லட்சத்தி 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் உதவி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபடுவதால் வியாபாரிகள் தாங்கள் எடுத்து செல்லும் பணத்திற்கு உரிய ஆவணத்தினை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here