PF பணத்தை உடனே எடுக்க வேண்டுமா?? இது இருந்தால் போதும்.., 5 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் எடுக்கலாம்!!!

0
PF பணத்தை உடனே எடுக்க வேண்டுமா?? இது இருந்தால் போதும்.., 5 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் எடுக்கலாம்!!!
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தங்களது ஓய்வு கால நலன் கருதி PF பணத்தை எடுக்காமல் சேமித்து வைக்கின்றன. ஆனால் சில அவசர தேவைகளுக்காக PF பணத்தை எடுக்க வேண்டிய சூழல் உருவாகிறது. அப்போது நாம் நினைத்த நேரத்தில் பணத்தை எடுக்க முடியாமல் பலரும் தவிக்கின்றனர். இந்நிலையில் தங்களது அவசர தேவைக்காக PF பணத்தை ஆன்லைன் மூலமாக எளிதில் எப்படி பெறலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
PF பணத்தை எடுக்க தேவைப்படும் ஆவணங்கள்:

  • UAN நம்பர்.
  • UAN உடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • பின் இந்த ஆதார் எண்  Withdraw   செய்யப்படும் பணத்தை பெரும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையில் மாற்றம்.., இதை மட்டும் குறிப்பிடக் கூடாது? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

 PF பணத்தை ஆன்லைன் மூலமாக எடுக்கும் வழிமுறை:
  • முதலில் https://www.epfindia.gov.in/site_en/For_Employees.php என்ற இணையப் பக்கத்தில் ஆன்லைன் சர்வீசஸ் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • பின் UAN எண், பாஸ்வேர்டு, கேப்சா ஆகியவற்றைக் கொடுத்து லாக் இன் செய்யவும்.
  • அடுத்ததாக மெனு பாரில் இருக்கும் ஆன்லைன் சர்வீஸ் பிரிவில் கிளைம் பகுதியை கிளிக் செய்து ஆதார் எண் உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண்ணை பதிவிட வேண்டும்.
  • அதன் பின் Proceed for Online Claim என்ற பட்டனை கிளிக் செய்து PF பணத்தை Withdraw செய்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பின் பணத்தை  Withdraw   செய்வதற்கான காரணத்தை பதிவிட்டு பணத்தின் அளவு, உங்களின் முகவரி, இணைக்கப்பட்ட வங்கி கணக்கின் காசோலை அல்லது பாஸ்புக் ஸ்கேன் காப்பி ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக submit கொடுத்தால் மொபைலுக்கு ஒரு OTP வரும். OTP-ஐ பதிவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் 10 நிமிடத்தில் உங்கள் PF பணத்தை வங்கிகளில் பெறலாம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here