என் மீது நம்பிக்கை அதிகமாகி விட்டது…, நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியது குறித்து தமிழக வீரர்!!

0
என் மீது நம்பிக்கை அதிகமாகி விட்டது..., நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியது குறித்து தமிழக வீரர்!!
என் மீது நம்பிக்கை அதிகமாகி விட்டது..., நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியது குறித்து தமிழக வீரர்!!

இந்திய அணியில் சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்து வரும் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்துக்கு எதிராக அரைசதம் அடித்தது குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் சுந்தர்:

தவான் தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-1 என்ற கணக்கில் இழந்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 போட்டிகள் மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த தொடரின் முதல் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 16 பந்தில் 3 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 37 ரன்களுடன் 231.25 ஸ்ட்ரைக் ரேட்டை எடுத்து சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்திருந்தார். இதே போல, இன்று நடைபெற்ற கடைசி போட்டியில், 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் என அரைசதம் (51) கடந்திருந்தார். ஆல்ரவுண்டரான இவர், எதிரணியின் ரன்களை கண்ட்ரோல் செய்வதிலும் வல்லவர் ஆவார்.

பல சதங்களை குவித்த ருதுராஜ் கெய்க்வாட்…, உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவாரா??

இதுவரை இவர் விளையாடிய, ஒரு நாள் போட்டிகளில் 48.33 மற்றும் டெஸ்ட் தொடர்களில் 66.25 என சிறந்த சராசரியை வைத்துள்ளார். இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் பேட்டி ஒன்றில் , வாய்ப்பளித்த பயிற்சியாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, இந்த போட்டிகளின் மூலம் என் மீது நிறைய நம்பிக்கை வந்துள்ளது. இதனால், முன்னோக்கி செல்ல முயற்ச்சிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here