மகளுக்கு குத்துச்சண்டை பயிற்சியளிக்கும் வார்னர் – வைரலாகும் வீடியோ

0

லகயே வாட்டி வதைக்கும் கொரோனா எந்த நாட்டையும் விட்டுவைக்கவில்லை.எல்லா நாடுகளுக்கு பரவி உள்ளது இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழக்கின்றனர்.மக்கள் அனைவரும் வீட்ற்குள்ளே இருக்கின்றனர்.இந்நிலையில் தன மகளுடன் பாலிவுட் பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டு அந்த வீடியோவை வைரலாக்கிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர்.

வார்னர் மகளுடன் ஆடும் வைரல் வீடியோ

2021 உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி – சிறந்த பார்மில் வீராங்கனைகள்..!

ஆஸ்திரெலிவில் உள்ள மெல்போர்னில் உள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் நேற்று பாலிவுட் பாட்டு ஒன்றுக்கு தன மகளுடன் ஆட்டம் போட்டு அந்த வீடியோவை வைரலாக்கியுள்ளார்,வார்னர் தன்னுடைய மகளுக்கு பாக்சிங் பாடம் எடுத்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் ஊடரங்கு அமலில் உள்ள நிலையில், அனைத்து விளையாட்டு வீரர்களும் வீட்டிற்குள் முடங்கியுள்ளார்கள்.இருப்பினும் அவர்களது ஆட்டத்தை யாராலும் நிறுத்த முடியவில்லை.என்ன மைதானத்தில் இருந்திருந்தால் அவர்களது ஆட்டத்தைவ விளையாடிக் கொண்டிருந்திருப்பார்கள். அனால் இப்பொழுது ஆடிக் கொண்டிருப்பது நடனம். ஏம்ப்பா உன்னோட வெள்ள முடியையும் கணக்குல எடுத்துக்கனுமா? தோனியை தொடர்ந்து கோலியிடம் வம்பு.

வார்னரின் என்டர்டெயின் விடீயோக்கள்

கொரோனாவால் வீட்டிற்குள் முடக்கம் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர், ஐபிஎல் தொடரிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர்.தற்போது கொரோனா காரணமாக வீட்டிற்குள் முடங்கிருந்தாலும் சமூக வலைதளம் மூலம் தன்னுடைய பல திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். உற்சாகம் அடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தான் பயிற்சி செய்யும் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு வந்த வார்னர், சமீப காலங்களில் தன்னுடைய ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தன்னுடைய மகளுடன் இணைந்து கடந்த வாரத்தில் பிரபல ஆஸ்திரேலிய பாடகர் டோனி வாட்சனின் ‘நெவர் சீன் த ரெயின்’ என்ற பாடலுக்கு அவர் டிக்-டாக் செய்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மகளுடன் குத்து போட்ட வார்னர் இதேபோல நேற்று, தன்னுடைய மகளுடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கையிப்பின் ‘சைலா கி ஜவானி’ என்ற பாடலுக்கு இவர் டான்ஸ் ஆடி அந்த பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதுபோன்ற இவருடைய பல்துறை திறமைகள் இவரது ரசிகர்களுக்கே இந்த கொரோனா ஊடரங்கு மூலம்தான் தற்போது தெரியவந்துள்ளது. மகளுக்கு பாக்சிங் பாடம் இதனிடையே, இவர்கள் இருவருக்கும் நடனம் ஆடி போர் அடித்துவிட்டதாம். இதனால், தற்போது பாக்சிங் பக்கம் சென்று விட்டனர். தன்னுடைய மகளுக்கு பாக்சிங் பாடம் கற்றுத்தர துவங்கி விட்டார் வார்னர். மகள் விரும்பும் தளங்களில் தான் பயிற்சி கொடுப்பதாகவும் வார்னர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கூறி வீடியோவையும் வெளியிட்டுள்ளார். சும்மா சொல்லக்கூடாது நல்லாவே பயிற்சி கொடுக்கிறார் வார்னர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here