கொரோனவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த மக்கள் – ஒரு டாக்டரின் கண்ணீர் கடிதம்

0

லகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழ் நாட்டிலும் அதிகரித்துள்ளது. சென்னையில் 9 இடங்களில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தபடி உள்ளது.சென்னையில் கொரோனா வைரசால் உயிரிழந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதோடு ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தினர்.இதற்க்கு ஒரு டாக்டர் கண்ணீர் கடிதம் எழுதியுள்ளார்.

டாக்டரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு:

சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்த வந்த 55 வயது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று(ஏப்.,19)உடல்நிலை மோசமடைந்ததால் டாக்டர் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த முதல் டாக்டர் ஆவார்.இப்பொழுது தமிழக பலி 16 ஆக அதிகரித்துள்ளது.

100 டாக்டர்கள் உயிரை காவு வாங்கிய கொரோனா – பீதியில் இத்தாலி மக்கள்.!

இதனிடையே அண்ணா நகர் வேலங்காடு பகுதிக்கு டாக்டரின் உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர். அதற்கு அப்பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். சிலர் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் ஆம்புலன்சைய்யும் தாக்கினர். இதில், ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைந்தது. ஊழியர் காயமடைந்தார். இதனையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு டாக்டர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. போராட்டம் தொடர்பாக சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

டாக்டர் ஒருவரின் கண்ணீர் கடிதம்

இதுகுறித்து பிரதீப் குமார் என்ற டாக்டர் சமூக வலைத்தளமான முகநூலில் பதிவு ஒன்றினை வெளியிட்டார். இந்த கடிதத்தை கண்ணீருடனும், ரத்தத்திலும் எழுதுகிறேன். கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை எதிர்த்து போராடும் ஒவ்வொரு டாக்டருக்காகவும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த எதிரியை எந்த குண்டுகளினாலும், புல்லட்களினாலும், ஏவுகணைகளினாலும் கொல்ல முடியாது. நண்பர்களே நாங்கள் வீரர்கள் இல்லை. நாங்களும்,உங்களை போன்றவர்கள் தான். இதனை தற்போது நீங்களும் அறிந்திருப்பீர்கள். ஏனென்றால், நீங்கள் அனைவரும் எங்களை தாக்கியுள்ளீர்கள். மிகவும் காயப்படுத்தியுள்ளீர்கள். அப்போது, டாக்டர்களுக்கு ரத்தம் வருவதை பார்த்திருப்பீர்கள். நாங்களும் உங்களை போன்றவர்கள் தான்.

எங்கள நரம்பியல் டாக்டர், கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போரில் உயிர்தியாகம் செய்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு கொண்டு சென்ற போது, 50க்கும் மேற்பட்ட மக்கள் எங்களை குச்சியாலும் கற்களாலும் தாக்கினீர்கள். ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும், மாநகராட்சி சுகாதார ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டது. உண்மையில், இதனை பெற நாங்கள் தகுதியானவர்களா? நம்மில் எவருக்கும் இது நடக்கலாம் என நீங்கள் நினைக்கவில்லையா? அனைத்து டாக்டர்களும் மருத்துவமனையை மூடிவிட்டால் என்ன நடக்கும்? நீங்கள் எங்கு சிகிச்சைக்கு செல்வீர்கள்?உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், உங்கள் மகன் அல்லது மகள், கணவன், மனைவி, பெற்றோர்கள் கூட அருகில் வரமாட்டார்கள். உங்களை தொட மாட்டார்கள். இது உண்மை. ஆனால், நாங்கள் உங்களை கவனித்து கொள்வோம். சிகிச்சை அளிப்போம். இது போன்று, சமூகமாக இதனை நீங்கள் எங்களுக்க திருப்பி அளிக்க வேண்டும். மனிதநேயம் இறந்துவிட்டது. அது புத்துயிர் பெற வேண்டும். உங்களுக்கு நாங்கள் வேண்டும். தயவு செய்து, எங்களை தாக்க வேண்டாம். உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here