இளம் வயதில் இறந்த பிரபல விஜே., மாரடைப்பால் மறைந்த  சோகம் – திரை பிரபலங்கள் இரங்கல் பதிவு!!

0
மீனாவின் கணவரை தொடர்ந்து நுரையீரல் தொற்றால் இறந்த திரை பிரபலம் - ரசிகர்கள் கண்ணீர்!!
சர்வதேச முன்னணி நடிகர் திடீர் மறைவு - மருத்துவ மனையிலே உயிர் பிரிந்த சோகம்! ரசிகர்கள் கண்ணீர்!!

பிரபல சினிமா விமர்சகரும், விஜேவுமான கௌஷிக், தனது இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கௌஷிக் மறைவு:

திரையுலகில் புகழ்பெற்ற பத்திரிகையாளராகவும், யுடியூப் திரை விமர்சகராகவும் வலம் வந்தவர்  கௌஷிக். இவர், பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய விஜே வாகவும் திகழ்ந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கலாட்டா என்கிற தனியார் இணையதளத்தில் பணியாற்றி வந்த இவர், சமூக வலைதளங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். 35 வயதான இவர், திடீரென நேற்று மதியம் 12 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு  சீதாராமம் மற்றும் சலார் ஆகிய படத்தின் அப்டேட்டுகளை வெளியிட்டிருந்தார்.

இவரது திடீர் மறைவு, அவருடைய குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது, இறப்பு குறித்து நடிகர் கௌதம் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் வெளியிட்டுள்ளார். மேலும் திரை பிரபலங்கள் பலரும், இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here