உங்களையும் விட்டுவைக்கலயா – ஆபாச அழைப்பு; நொந்து போன சின்னத்திரை ராணி!!!

0

விஜே அஞ்சனாவிற்கு தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து தவறான மெசேஜ் மற்றும் அழைப்பு வருவதாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆபாச அழைப்பு:

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக களமிறங்கி தற்போது ஜீ தமிழ் சேனலில் ஆஸ்தான தொகுப்பாளினியாக மாறி இருப்பவர்தான் VJ அஞ்சனா. சின்னத்திரை ராணி என்று அழைக்கப்பட்ட அஞ்சனாவை; கயல்’ படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இன்ஸ்டாகிராமில் அஞ்சனாவுக்கு ஒரு மில்லியனுக்கும் மேல் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில்; அஞ்சனா தனக்கு  டைரக்ட் மெசேஜ்களில் சில ஆபாச மெசேஜ்கள் வருவதாகவும், பாலியல் ரீதியான டார்ச்சர்கள் கொடுப்பதாகவும் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தனது மனைவிக்கு; ஒரு போன் நம்பரில் இருந்து போன் பண்ணி டார்ச்சர் செய்வதாகவும்; அவரது கணவரும் நடிகருமான சந்திரன் ட்விட்டரில் தமிழ்நாடு போலீசாரை டேக் செய்து ட்வீட் போட்டுள்ளார். மேலும், அந்த நபரின் செல்போன் நம்பரையும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவை ட்விட் செய்த அஞ்சனா இதுபோன்ற தொல்லைகள் கடந்த சில ஆண்டுகளுக்கும் முன்பும் ஏற்பட்டது. ஆனால் இப்போது அது அதிகளவில் மாறிவிட்டதாக கூறி அதிர வைத்துள்ளார்.

மேலும் இதுபோன்று வரும் மெசேஜ் மற்றும் அழைப்புகள் அனைத்தையும் நான் பிளாக் செய்துவிடுவேன்; இருந்தாலும் எனக்கு பயமாக இருக்கிறது என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறை மற்றும் சைபர் கிரைம் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here