வாட்ஸ் அப்பில் வந்த புதிய அம்சம்..!ஆடியோ செய்திகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் அசத்தல் வசதி!!!

0

வாட்ஸ் அப் செயலியில் பிறர் நம்மளுக்கு அனுப்பும் ஆடியோ செய்திகளின் வேகத்தை கட்டுப்படுத்தும் புதிய அம்சத்தை தன்னுடைய பயனர்களுக்காக வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உலகில் அதிகளவிலான மக்களால் தொலைத்தொடர்புக்காக பயன்படுத்தப்பட்டு வருவது வாட்ஸ் அப் செயலி தான். கிட்டத்தட்ட இரண்டு பில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக அது உள்ளது.  இந்தச் செயலியை கடந்த 2014 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. பின்னர் அடிக்கடி புதிய அப்டேட்கள் கொண்டுவரப்பட்டன.

தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு புதிய வசதியை இந்த செயலியில் புகுத்தி உள்ளது. சிலர் மற்றவர்களை விட வேகமாக பேசுவார்கள். சிலர் மற்றவர்களை விட வேகமாக கேட்பார்கள். இவ்வாறு முரண்பாடுடைய இருவர் வாட்ஸ் அப்பில் ஆடியோ வழியாக பேசினால் அது அவர்கள் இருவருக்கும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். எனவே வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களுக்கு ஏற்றவாறு ஆடியோ வேகத்தை அதிகரிப்பதற்கான புதிய அம்சத்தை கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் ஆடியோவின் வேகத்தை 1 மடங்கு, 1.5 மடங்கு, 2 மடங்கு என அதிகரித்துக்கொள்ள முடியும். 2.21.9.15 ஆண்ட்ராய்டு வெர்ஷன் மற்றும் 2.21.100 ஐபோன் வெர்ஷனைக் கொண்டிருக்கும் பயனர்கள் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். மேலும் வெப் மற்றும் டெஸ்க்டாப் வெர்ஷன் 2.119.6 ஆக இருக்கும்போது இதைப் பயன்படுத்த முடியும். ஆடியோ ப்ளே ஆக ஆரம்பித்தவுடன், வலது பக்கத்தில் உள்ள பட்டனை அழுத்தி  வேகத்தை கட்டுப்படுத்தலாம்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here